தீபாவளி திருநாள் அன்று வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல்.
இத்திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாகவும் கதாநாயகிகளாக நித்யா மேனன் காஜல் அகர்வால் சமந்தா மற்றும் வைகைப்புயல் வடிவேலு ,கோவை சரளா ,எஸ்.ஜே.சூர்யாஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அட்லி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.சமீபத்தில் யூ டியூபில் ஆளப்போறான் தமிழன் பாடல் வரி வீடியோ 30 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்தது.
இதை கொண்டாடும் விதமாக ஆளப்போறான் தமிழன் பாடலின் 1 நிமிடம் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.தற்போது நவம்பர் 19 ஆம் தேதி ஜு தமிழ் தொலைகாட்சியில் அனைத்து பாடல் வீடியோக்களும் ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளனர்.