
ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் ஸ்ரீலீலா இணைந்தார் – நட்சத்திரப் பட்டியலில் மேலும் ஒரு முக்கிய வரவு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளார். இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே முன்னணி கலைஞர்களின் கூட்டணியால் கவனம் ஈர்த்துள்ள ‘தர்மன்’ திரைப்படத்தில் ஸ்ரீலீலாவின் வருகை, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீலீலா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார் என்பது குறித்த விவரங்களைப் படக்குழு இன்னும் வெளியிடவில்லை.
இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்கள் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். வித்தியாசமான கதைக்களம், பிரம்மாண்டமான திரை அனுபவம், முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு எனப் பல அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருகிறது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
ஒவ்வொரு அறிவிப்பின் மூலமும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து வரும் ‘தர்மன்’ படக்குழு, தற்போது ஸ்ரீலீலாவின் வருகையால் தனது நட்சத்திரக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் தயாரிப்பு கூட்டணியில் உருவாகும் இப்படம், திரையரங்குகளில் என்ன மாதிரியான அனுபவத்தை வழங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Sreeleela Joins Superstar Rajinikanth’s ‘Dharman’; Star Cast Gets Bigger!
Actress Sreeleela has officially joined the cast of ‘Dharman’, the much-anticipated film starring Superstar Rajinikanth. The announcement was made by the film’s makers, adding further excitement to the project.
Already generating considerable buzz for its impressive combination of talent, ‘Dharman’ has now added another prominent name to its ensemble. Sreeleela’s inclusion has further heightened curiosity and expectations surrounding the film. However, details about her character and role in the story are yet to be revealed.
Directed by Ashwath Marimuthu, ‘Dharman’ features music by Anirudh Ravichander, while acclaimed action choreographers Anbariv are in charge of designing the film’s action sequences. With an ambitious narrative, grand cinematic scale and a strong technical team, the film is shaping up to be an exciting big-screen spectacle.
The film is jointly produced by Kamal Haasan and R. Mahendran under the banners of Raajkamal Films International and Turmeric Media.
With each new announcement, ‘Dharman’ continues to build anticipation among moviegoers. Sreeleela’s addition further strengthens its star ensemble, making the collaboration between Superstar Rajinikanth and producer Kamal Haasan one of the projects to watch out for. Audiences are now eagerly looking forward to more updates from the film’s team.
