Monday, December 9
Shadow

ஸ்ரீ ரெட்டி குற்றசாட்டுக்கு சுந்தர் .C அதிரடி மறுப்பு

நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக தெலுங்கு திரைப்பட பிரபலங்கள் மீது புகார் கூறியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதனால் தெலுங்கு திரையுலகத்தில் சுனாமி வந்தது போல் பரபரப்பு கிளம்பியது.

தெலுங்கு திரையுலகிற்கு ஒரு சிறிய ஓய்வு கொடுத்துள்ள ஸ்ரீ ரெட்டி புயல், தற்போது தமிழ் சினிமா பக்கம் திசை திரும்பி, சூறாவளியாக வீசி வருகிறது. நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பு கிளப்பினர் ஸ்ரீ ரெட்டி.

தற்போது இயக்குனர் சுந்தர்.சி பற்றி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஐதராபாத்தில் அரண்மனை படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். நான் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர் சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார்” என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

பேஸ்புக் மூலம் எனக்கு ஏற்கனவே அறிமுகமான நண்பர் ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரையும் சந்தித்தேன். அடுத்த படத்தில் உங்களுக்கு நிச்சயம் முக்கிய கதாபாத்திரம் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்.

படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட் (பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன் பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்… கணேஷ் ஒரு மோசடிகாரன். அவர் எனக்கு உதவி செய்யவில்லை” என தனது பேஸ்புக்கில் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் , சுந்தர் ,C கூறியது” (ஸ்ரீ ரெட்டி) கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் வழக்கு தொடர்வோம்” என சுந்தர்.சி தெரிவித்தார்.