ஸ்ரீ ரெட்டி குற்றசாட்டுக்கு சுந்தர் .C அதிரடி மறுப்பு
நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக தெலுங்கு திரைப்பட பிரபலங்கள் மீது புகார் கூறியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதனால் தெலுங்கு திரையுலகத்தில் சுனாமி வந்தது போல் பரபரப்பு கிளம்பியது.
தெலுங்கு திரையுலகிற்கு ஒரு சிறிய ஓய்வு கொடுத்துள்ள ஸ்ரீ ரெட்டி புயல், தற்போது தமிழ் சினிமா பக்கம் திசை திரும்பி, சூறாவளியாக வீசி வருகிறது. நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பு கிளப்பினர் ஸ்ரீ ரெட்டி.
தற்போது இயக்குனர் சுந்தர்.சி பற்றி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஐதராபாத்தில் அரண்மனை படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்ப...
