Saturday, April 18
Shadow

பல படங்கள் வெளியாகியும் இன்றும் வசூலில் சாதிக்கும் விவேகம்

அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி உலகம் முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் விவேகம் வெளியாகி இருந்தது.

ஆரம்பத்தில் விமர்சனங்களில் சில சறுக்கல்களை கண்டாலும் சாதனைகளுக்கு பஞ்சமில்லாமல் வசூலில் தெறிக்க விட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் சுமார் 8 படங்களுக்கு மேலாக ரிலீஸ் ஆனது, அப்படி இருந்தும் வசூலில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் விவேகம் தான் இருக்கிறது.

இதனை ரோகினி தியேட்டர் உரிமையாளர் நிகிலேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் கேரளாவில் நஷ்டம் என்று சொன்ன விநியோகிஸ்தர்களும் சந்தோஷத்தில் உள்ளனர் காரணம் மிக பெரிய ஹீரோ படம் வெளியாகியும் விவேகம் வசூல் குறையவில்லையாம் .

இந்தியா மட்டும் இல்லாமல் உலா அளவிலும் விவேகம் வசூல் சாதனை புரிந்துள்ளது. த,இழ நாட்டில் மட்டும் இதுவரை நூறு கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது இது கபாலி மற்றும் தெறி சாதனையுடன் இணைந்தது.

Leave a Reply