
ஜோதிகா ஹீரொயினாக நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோக்களாக விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், பாகத் பாசில், அரவிந்த் சாமி ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் துல்கர், பாகத் பாசில் ஆகியோர் நடிப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரவிந்த்சாமி மற்றும் விஜய் சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்த படத்தை மணிரத்தினத்துடன் சூர்யாவும் இணைந்து தயாரிக்கிறார் என்றும் செய்திகள் கசிந்துள்ளது அதோடு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான் ஜோதிகா என்றும் கூறபடுகிறது. அதோடு இந்த படத்தி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
