கடந்த வாரம் இணையதளங்கள் முதல் எல்லா ஊடகங்களில் மாட்டி சிக்கி தவித்தவர் சௌந்தர்யா தனது சொந்த வாழ்க்கை மட்டும் இல்லாமல் பொது வாழ்கையிலும் சிக்கி தவித்தவர் என்றால் அது சௌந்தர்யா இவை அனைத்துக்கும் முற்றுபுள்ளி வைத்தார் சௌந்தர்யா.
கோச்சடையானை தொடர்ந்து இன்னொரு படம் இயக்கும் வேலையை தொடங்கிவிட்டார் செளந்தர்யா. இந்த முறை அவர் கையில் எடுத்திருக்கும் ஸ்கிரிப்ட்டை எழுதியவர்…தனுஷ்.!
பவர் பாண்டி மூலம் இயக்குநராகும் தனுஷ், தனது இன்னொரு ஸ்க்ரிப்ட்டை செளந்தர்யாவுக்கு தந்ததோடு மட்டுமில்லாமல், படத்தை வுண்டர்பார் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார். ஏற்கனவே தனுஷை இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை சொல்லியிருந்தார் செளந்தர்யா. இந்தப் படத்தில் தனுஷ் நடிப்பாரா என்பதை தெரிந்துக் கொள்ள கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.
படத்துக்கு “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்களாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. ஒரே நேரத்தில் ரஜினி படம், அவரது மகள் இயக்கும் படம் இரண்டையும் தயாரிக்கிறார் தனுஷ்.