
இந்திய ரசிகர்களை குறிவைக்கும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’… தல்சிம் கதாபாத்திரத்தில் வித்யுத் ஜமால்; மிரட்டலான டிரெய்லர் வெளியீடு!
உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள புகழ்பெற்ற வீடியோ கேம் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ தற்போது பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படமாக உருவாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி, சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் கிடாவோ சகுராய் இயக்கியுள்ளார். உலகளாவிய ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களையும் கவரும் வகையில், முன்னணி ஆக்ஷன் நடிகர் வித்யுத் ஜமால் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றிருப்பது திரைப்படத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
டிரெய்லரில், யோகா சக்தியால் புகழ்பெற்ற தல்சிம் கதாபாத்திரத்தில் வித்யுத் ஜமால் தோன்றும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவரது தனித்துவமான சண்டைக் காட்சிகளும், வித்தியாசமான தோற்றமும் திரைப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1993-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு நகரும் கதையில், பிரிந்துபோன போர்வீரர்களான ரியூ மற்றும் கென் மாஸ்டர்ஸ் மீண்டும் ஒன்றிணைந்து உலகின் மிகப்பெரிய ‘வேர்ல்ட் வாரியர்’ போட்டியில் பங்கேற்கும் சூழ்நிலை உருவாகிறது. மர்மமான போராளி சுன்-லி அவர்களை இந்த போட்டிக்குள் அழைத்துச் செல்கிறார். ஆனால், அந்தப் போட்டியின் பின்னணியில் உலகையே அச்சுறுத்தும் ஆபத்தான சதித்திட்டம் மறைந்திருப்பது தெரியவருகிறது.
அந்தச் சதியை முறியடிக்கும் முயற்சியில் ரியூவும் கெனும் தங்களின் கடந்தகால நினைவுகளையும், தனிப்பட்ட மோதல்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிரடி சண்டைக் காட்சிகள், உணர்ச்சிகரமான மோதல்கள், பிரம்மாண்ட காட்சியமைப்புகள் மற்றும் கேம் ரசிகர்கள் விரும்பும் சின்னச் சின்ன அம்சங்கள் அனைத்தும் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன.
புகழ்பெற்ற ஆர்கேட் விளையாட்டின் அடையாளங்களாக விளங்கும் ஹடூகன், ரவுண்ட்ஹவுஸ் கிக் உள்ளிட்ட சண்டை நுட்பங்கள் திரைப்படத்தில் அசல் வடிவில் இடம்பெற்றிருப்பதால், கேம் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
திரைப்படத்தில் நோவா சென்டினியோ (கென் மாஸ்டர்ஸ்), ஆண்ட்ரூ கோஜி (ரியூ), கலினா லியாங் (சுன்-லி), ஜேசன் மோமோவா (பிளாங்கா), டேவிட் டாஸ்ட்மால்சியன் (எம். பைசன்), ரோமன் ரெய்ன்ஸ் (அகுமா), கோடி ரோட்ஸ் (கைல்), ஆண்ட்ரூ ஷுல்ஸ், எரிக் ஆண்ட்ரே, ஆர்வில் பெக், ஒலிவியர் ரிக்டர்ஸ், ஹிரோஒக்கி கோட்டோ, ரெய்னா வல்லாண்டிங்காம், அலெக்சாண்டர் வோல்கனோவ்ஸ்கி, கர்டிஸ் ‘50 சென்ட்’ ஜாக்சன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தை பாரமவுண்ட் ஸ்டுடியோஸ் இந்தியா நிறுவனம், 2026 அக்டோபர் 16 முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.

Street Fighter Trailer Unleashes High-Octane Action; Vidyut Jammwal Joins the Iconic Franchise as Dhalsim
The highly anticipated trailer of Street Fighter has finally been unveiled, offering fans an action-packed glimpse into one of the most iconic video game adaptations in recent years. Backed by Paramount Pictures, Legendary Entertainment, and Capcom, the film promises a thrilling cinematic experience that blends nostalgia with spectacular martial arts action.
One of the biggest highlights for Indian audiences is the inclusion of action star Vidyut Jammwal, who steps into the role of the legendary yoga master Dhalsim. His striking screen presence and intense action sequences have already generated significant excitement following the trailer’s release.
Directed by Kitao Sakurai, Street Fighter is set in 1993 and follows the journey of estranged warriors Ryu (Andrew Koji) and Ken Masters (Noah Centineo), who are drawn back into battle after the mysterious Chun-Li (Callina Liang) invites them to compete in the next World Warrior Tournament.
However, what initially appears to be the ultimate martial arts competition soon reveals a far more sinister conspiracy. As a deadly plot unfolds behind the tournament, Ryu and Ken are forced to confront their painful past while facing each other in a battle that could determine not only their fate but the future of the world.
The trailer showcases explosive fight choreography, breathtaking martial arts sequences, and several signature moves from the beloved arcade game, including the iconic Hadouken and powerful roundhouse kicks. With fan-favourite characters making their live-action return, the film aims to deliver an authentic Street Fighter experience for longtime fans while introducing the franchise to a new generation.
The ensemble cast includes Noah Centineo as Ken Masters, Andrew Koji as Ryu, Callina Liang as Chun-Li, Roman Reigns (Joe Anoa’i) as Akuma, David Dastmalchian as M. Bison, Cody Rhodes as Guile, Andrew Schulz as Dan Hibiki, Eric André as Dan Savage, Vidyut Jammwal as Dhalsim, Orville Peck as Vega, Olivier Richters as Zangief, Hirooki Goto as E. Honda, Reina Vallandingham as Juli, Alexander Volkanovski as Joe, Curtis “50 Cent” Jackson as Balrog, and Jason Momoa as Blanka.
Paramount Studios India will release Street Fighter in cinemas across India on October 16, 2026.
