Wednesday, October 28
Shadow

பட்டையை கிளப்பும் ‘Surviva’ பாடல் ரசிகளிடம் பெரும் வரவேற்பு

ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீட்டுக்கு மும்முரமாக தயாராகி வருகிறது ‘விவேகம்’. இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் இப்படத்தின் ‘Surviva’ பாடலின் ஆடியோ டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அப்பாடலின் முழுமையான வடிவம், Saavn-ஆப்பில் ஜூன் 19-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இப்பாடலை கேட்க வேண்டுமானால் Saavn ஆப் மொபைல் போனில் இருந்தால் மட்டுமே முடியும்.

அனிருத் இசையமைப்பில் வெளியான Surviva பாடலை, ஒரு மணி நேரத்தில் சுமார் 1 லட்சம் முறை கேட்டு ரசித்துள்ளார்கள். இது மிகப்பெரிய சாதனை என்று Saavn நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், Saavn இணையத்தில் ‘Surviva’ பாடல் பெரும் சாதனையை புரியும் என்று தெரிவித்துள்ளார்கள்.

7 பாடல்கள் அடங்கிய ‘விவேகம்’ படத்தின் இசை வெளியீடு ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. முந்தைய அஜித் படங்கள் போலவே, இப்படத்துக்கும் இசை வெளியீடு இன்றி நேரடியாக கடைகளில் வெளியீடு இருக்கும் என தெரிகிறது.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

Leave a Reply