Friday, April 17
Shadow

சீனாவில் வெளியாக உள்ள சூப்பர்ஸ்டார் படம்

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாக்கியுள்ள 2.0 படம், சீனாவில் ரிலிஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 2.0. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இந்தபடம், பெரியளவில் வசூலை அள்ளி கொடுத்தது.

தற்போது இந்த படம் சீனாவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 12-ம் தேதி, சுமார் பத்தாயிரம் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் 2.0 பாலிவுட் டைட்டிலான ரோபாட் 2.0 என்ற தலைப்புடன், சீனா மொழியிலும், ஆங்கில சப் டைட்டில் உடனும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சீனாவில் ஹெச்.ஓய் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.