Friday, April 17
Shadow

Tag: சீனாவில்

இன்று சீனாவில் வெளியாகிறது சூப்பர்ஸ்டாரின் 2.0

Latest News, Top Highlights
நடிகர் ரஜினியின் 2.0 திரைப்படம், சீனாவில் முதன் முறையாக, 48 ஆயிரம் ஸ்கீரின்களில் இன்று வெளியாகிறது. திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், நடிகை எமிஜாக்சன் மற்றும் அக்சய் குமார் நடிப்பில் உருவான இந்த திரைப்படம், கடந்த நவம்பரில் வெளியாகி, 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. ரஜினிகாந்த் நடித்த படம் ஒன்று சீனாவில் பிரமாண்டமாக ரிலீசாவது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில், ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லைகா புரொடக்சன் தயாரிப்பிலான தர்பார் படம், 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 22000 காட்சிகள் வரை நாளை சீனாவ...
சீனாவில் வெளியாக உள்ள சூப்பர்ஸ்டார் படம்

சீனாவில் வெளியாக உள்ள சூப்பர்ஸ்டார் படம்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாக்கியுள்ள 2.0 படம், சீனாவில் ரிலிஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 2.0. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இந்தபடம், பெரியளவில் வசூலை அள்ளி கொடுத்தது. தற்போது இந்த படம் சீனாவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 12-ம் தேதி, சுமார் பத்தாயிரம் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் 2.0 பாலிவுட் டைட்டிலான ரோபாட் 2.0 என்ற தலைப்புடன், சீனா மொழியிலும், ஆங்கில சப் டைட்டில் உடனும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சீனாவில் ஹெச்.ஓய் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
சீனாவில் திரையிடப்பட உள்ள “பரியேறும் பெருமாள்”

சீனாவில் திரையிடப்பட உள்ள “பரியேறும் பெருமாள்”

Latest News, Top Highlights
சீனாவில் தற்போது நடந்து வரும் ஹைனன் தீவு சர்வதேச திரைப்பட திருவிழாவான ஸ்பிரிங் ஸ்கிரினிங்-னின் ஒரு பகுதியாக ஹைனன் தீவில் உள்ள ஐந்து நகரங்களில் கதிர், ஆனந்தி நடிப்பில், வெளியான பரியேறும் பெருமாள் படத்தை திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.  கதிர் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். தவிர, யோகிபாபு, லிஜீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திற்காக பல இடங்களில் 2018 -ம் ஆண்டின் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார், மாரி செல்வராஜ். இந்தப்படம் இப்பொழுது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது என்பது கூடுதல் தகவல்....