Wednesday, October 28
Shadow

நடிகர் சூர்யாவுக்கும் விஜய்க்கும் உள்ள தொடர்வு இதுவரை வெளிவராதா தகவல்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இஅவர் நடிகர் சிவகுமார் மகன் என்பது நாம் அறிந்த விஷயம் தன் அப்பாவை போல சினிமாவில் இருந்தாலும் ஒழுக்கத்திலும் சரி மற்றவர்களிடம் பழகுவதில் அப்பாவை மிஞ்சியர் இதுவரை எந்த நடிகையுடனும் கிசுகிசு வந்தத்தில்லை அப்படி கட்டுகொப்புடன் வாழ்பவர் தன் குடும்பத்தில் மீதி அளவு கடந்த பாசம் வைத்து இருப்பவர் அதோடு ஏழை மக்களுக்கு உதவுபர் முக்கியமாக கல்விக்கு அதிக அளவுக்கு உதபுவர்  இப்படி பட்ட இவரை பற்றி இதுவரை வெளிவராதா தகவல்கள் இதோ உங்களுக்காக

முதல் தன்னம்பிக்கை வார்த்தைகள் ?

நான் பத்தாவது படித்து கொண்டிருந்த போது ; “ரூமிற்குள்ளேயே இருக்காதே வெளியே வா , புதிதாக முயற்சி செய் ” என்ற அப்பாவின் அந்த வார்த்தைகள் என்னை இங்கு நிறுத்தியிருக்கிறது .
முதல் மாறு வேடம் ?

ஸ்கூலில் நடந்த மாறுவேடப்போட்டிக்காக அப்பாவின் மேக்கப்மேன் சுந்தரமூர்த்தி உதவியுடன் பிச்சைக்காரன் வேடம் போட்டு போனேன் ,வழியிலேயே ஒரு பாட்டி பார்த்து 50 பைசா போட்டார், ஆனால் ஸ்கூலுக்குள் விடவில்லை, இங்கே பிச்சை எடுக்கக்கூடாது போ ” என்றனர் .

முதல் விமானப் பயணம் ?

கோவையில் நடந்த லட்சுமிஅக்காவின் திருமணத்திற்கு அப்பாவுடன் சென்றது. விமானப்பணிபெண் கொண்டு வந்த தட்டிலிருந்து நிறைய சாக்லெட் எடுத்திரு க்கிறேன், விமானம்தரை இறங்கும்போது பயந்து வாந்தியெடுத்து விட்டேன் .
முதல் ராக்கிங் அனுபவம் ?

லயோலாகல்லூரியில் சென்ற முதல் நாள் ,சீனியர்கள் 10 பேர் என்னை காரில் கடத்தி சென்ட்ரல் வந்தார்கள், ரிப்பன் பில்டிங் முன்னாடி காரை நிப்பாட்டி , “ஒரு ரெட்கலர் ரிப்பன்,ஒரு கீரின்கலர் ரிப்பன் வாங்கிட்டு பத்து நிமிடத்தில் வா. லேட்டான ஃபிகருங்க முன்னாடி நர்சரி ரைம்ஸ் பாடணும் ” என்று 10 ரூபாய் கையில் திணித்து அனுப்பினார்கள் .

அக்கறையான முதல் போன் ?

நான் எங்கே இருந்தாலும் மதியம் ஒரு முறை, இரவு ஒருமுறை தவறாமல் ஒரு போன் கால் வந்துவிடும் ,” சரவணா ! சாப்பிட்டியப்பா ? ” என்ற அம்மாவின் குரல் ஒலிக்கும் , கல்லூரிநாட்களில் நண்பர்களுடன் சுற்றிதிரிந்து இரவு 11மணிக்கு வருவேன் ,அம்மா மட்டும் சாப்பிடாமல் தூங்காமல் விழித்திருப்பார்.

முதல் சண்டை ?

பக்கத்து வீட்டு அக்காவிடம் வாலாட்டிய ஒருவனை நடுரோட்டில் புரட்டியெடுத்தே ன் ,சினிமாஷூட்டிங்போல கூட்டம் கூடி விட்டது. என்முதல் பைட் இதுதான் .
வேலைக்குப்போன முதல் நாள் ?

பி.காம்.முடித்து விட்டு அம்பத்தூர் கார்மெண்ட்கம்பெனியில் சேர்ந்தேன் , முதல் நாள்காலை பஸ்சில் 8 மணிக்குள் கம்பெனியில் இருந்தேன்,எட்டரை மணிக் கு வந்த மேனேஜர் என்னைகூப்புட்டு “மிஸ்டர் சரவணன் இங்கே வாங்க என்றழைத்து ,துடப்பம் எடுத்து ஆபீஸ் ரூமைக்கூட்டி பெருக்குங்க ” என்றார் . பெருக்கினேன் .நான்யாருடைய பையன் என்பதைச் சொல்லாமல்தான் வேலையி ல் சேர்ந்திருந்தேன் .
-முதல் சம்பளம் ?

தினம்காலை மாலை பஸ்சில் சென்று முப்பது நாள் உழைத்ததின் பயனாக ஒண்ணாம் தேதி 1200ரூபாய் முதல் சம்பளம்ரொம்ப சந்தோஷமாக வாங்கி னேன், அன்றே வீட்டுக்கு வந்ததும் தங்கைபிருந்தாவை அழைத்துகொண்டு பாண்டிபஜார் போய் அம்மாவுக்கு புடவை எடுத்தோம் விலை 1214 ரூபாய் என்னிடம் இருந்தது 1200தான் .தங்கையின் பாக்கெட் மணியிலிருந்து 14ரூபாய் கடன் வாங்கி புடவைஎடுத்துபோய் அம்மாவிடம் கொடுத்தேன்,அம்மாமுகத்தில் அப்படிஒரு மகிழ்ச்சி, அப்படியொரு பெருமை .

நடித்த முதல் காட்சி ?

எழும்பூர் மியூசியத்தில் நண்பர்களுடன் பைக்கில் சீறிவந்து தள்ளுவண்டிசலவை காரரிடம் “கிருஷ்ணா சட்டையைக்கொடு” என்று கேட்பது.

முதல் முத்தம் ?

சிம்ரனுக்கு முத்தம் கொடுத்து விட்டு , ரொமான்டிக்காக பேசிக்கொண்டே அவர் மடியில் படுக்க வேண்டும் “என்று வசந்த் சார் காட்சியைவிளக்கியதும். உச்சிமுதல் பாதம்வரை கூச்சமுடைய என்னை பலர் பார்க்க கேமிராமுன் செய்யச்சொன்னது ம் எனக்கு உதறல் எடுத்தது, வியர்த்து கொட்டியது.” டேய் முத்தம்கொடுக்கிறதா இருந்தா முன்னாடியே கொடுத்து முடிச்சு ட்டு ,டயலாக்கைமறக்காமல்பேசு ” என்று டைரக்டர்கமெண்ட்அடிக்க,யூனிட்டே கொல்லென்று சிரித்தது.

முதல் விமர்சனம் ?

லயோலாவில் நான் காமர்ஸ் , நண்பன் விஜய் விஷூவல்கம்யூனிகேசன் .என் வகுப்புக்கு அடிக்கடி வந்து விடுவார் , ஒரு நாள் புரபசர் பார்த்து இருவரையும் வகுப்பைவிட்டு வெளியேற்றி விட்டார் . நேருக்குநேரில் சேர்ந்து நடித்தோம், படம் “ஓகே டா ! முதல் படத்துல யாரையும் ஏமாத்துல நீ” என்ற நண்பன் விஜய் சொன்ன டானிக் வார்த்தைகள் .