Friday, April 17
Shadow

சூர்யாவின் ‘காப்பான்’ படத்திற்கு கேரளாவில் தடை

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் ‘காப்பான்’ என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் கேரளா வினியோகஸ்தர் ஒருவர் வினியோகஸ்தர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கேரளாவில் ‘2.0’ படத்தை திரையிட்டதில் தனக்கு பல கோடி நஷ்டமானதாகவும், இதனால் ‘காப்பான்’ படத்தின் கேரள வினியோக உரிமையை குறைந்த விலைக்கு தனக்கு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து வினியோகஸ்தர் சங்கம் தரப்பில் கூறுகையில், “இந்த கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்” என கூறியுள்ளனர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஜான் சார்லஸ். சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து ‘காப்பான்’தனது கதை என்றும் அதை கே.வி. ஆனந்த் திருடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தை கேரளாவில் வினியோகம் செய்த டோமிசன் முளகுபாடம் என்பவர் ‘காப்பான்’ படத்துக்கு எதிராக கேரள வினியோகஸ்தர் சங்கத்தில் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் “கேரளாவில் 2.0 படத்தை திரையிட்டதில் தனக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதை ஈடுகட்ட காப்பான் படத்தின் கேரள வினியோக உரிமையை குறைந்த விலைக்கு தனக்கு தரவேண்டும். ஆனால் வேறு ஒருவருக்கு அந்த உரிமையை கொடுத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.இதுகுறித்து விசாரித்த கேரள வினியோகஸ்தர் சங்கம் டோமிசனுக்கு வினியோக உரிமையை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளதாகவும் அதை ஏற்காத பட்சத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காப்பான் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.