Saturday, October 10
Shadow

ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ – அதிரடி அவதாரத்தில் சூர்யா!

ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வரும் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ – அதிரடி அவதாரத்தில் சூர்யா!

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படமான ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு வெளியாகியுள்ள புதிய போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை சூர்யாவை பார்த்திராத வகையில், கோபம் கலந்த அதிரடியான தோற்றத்தில் அவர் காட்சியளிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பழமையான காரின் பின்னணியில், கையில் ஆயுதத்துடன் சூர்யா நிற்கும் காட்சி, படத்தில் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் இருப்பதை உணர்த்துகிறது. அவரைச் சுற்றிலும் நிலவும் இருள், பதற்றமான சூழல் மற்றும் பின்னணியில் காணப்படும் சம்பவங்கள், படத்தின் கதைக்களம் குறித்து பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

‘விஸ்வநாதன் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவை மேற்கொள்ள, நவீன் நூலி படத்தொகுப்பை கவனித்துள்ளார். நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ள இப்படம், தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் உலகளவில் வெளியாகிறது.

படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள “Bookings Open Now” என்ற அறிவிப்பு, வெளியீட்டுக்கு முன்பாகவே முன்பதிவு தொடங்கிவிட்டதை உறுதி செய்கிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

ஒருபுறம் குடும்பப் பின்னணியை தலைப்பிலேயே முன்வைக்கும் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’, மறுபுறம் அதிரடி காட்சிகளுடன் சூர்யாவை களமிறக்குகிறது. குடும்பம், உறவுகள், மோதல் மற்றும் ஆக்‌ஷன் என பல அம்சங்களை ஒன்றாக இணைத்து உருவாகியிருக்கும் இப்படம், ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை கொடுக்கப் போகிறது என்பதே தற்போது சினிமா வட்டாரத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Suriya’s ‘Vishwanath & Sons’ Set to Hit Screens on August 14 with an Action-Packed Avatar

The much-awaited ‘Vishwanath & Sons’, starring Suriya in the lead, is all set to arrive in theatres worldwide on August 14. Directed by Venky Atluri, the film has already created considerable curiosity among moviegoers with its intriguing posters and promotional material.

The latest poster released ahead of the film’s theatrical launch has further raised expectations. Featuring Suriya in an intense and rugged avatar, the poster shows him standing with a weapon in hand against the backdrop of a vintage car. His fierce expression and the tense atmosphere surrounding him hint at a strong action element in the film.

The poster also leaves plenty of room for speculation about the story. The dark setting, the vintage backdrop and the mysterious circumstances surrounding Suriya’s character suggest that the film could have several layers beyond its family-oriented title.

‘Vishwanath & Sons’ features music by G. V. Prakash Kumar, while Nimish Ravi is the cinematographer and Navin Nooli handles the editing. The film is produced by Naga Vamsi and Sai Soujanya and is scheduled for a worldwide theatrical release.

With the announcement “Bookings Open Now”, advance bookings for the film have already begun, adding to the excitement among Suriya’s fans ahead of the release.

Interestingly, while the title ‘Vishwanath & Sons’ suggests a family-driven story, the latest poster presents Suriya in a completely different, action-oriented mood. The combination of family emotions, relationships, conflict and high-intensity action has made the film one of the notable releases to watch out for this August.

With August 14 fast approaching, all eyes are now on ‘Vishwanath & Sons’ and the theatrical experience Venky Atluri and Suriya have crafted for audiences.