Wednesday, July 22
Shadow

சிவராஜ்குமார் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்… ‘Welcome to Wildlife’ ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவர்ந்தது!

சிவராஜ்குமார் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்… ‘Welcome to Wildlife’ ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவர்ந்தது!

சென்னை:

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் புதிய பான் இந்தியா திரைப்படமான ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

வித்தியாசமான கதைக்களங்களையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் பெற்ற இயக்குநர் கார்த்திக் ராஜு, இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழில் ‘திருடன் போலீஸ்’, தெலுங்கில் ‘Ninu Veedani Needanu Nene’, அண்மையில் வெளியான ‘Single’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்ற அவர், தற்போது சிவராஜ்குமாரை மையமாகக் கொண்டு மிகப்பெரிய பான் இந்தியா முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

KVK Productions நிறுவனம் சார்பில் குடிபுடி விஜய் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை கவரும் வகையில் பல மொழிகளில் திரைப்படம் உருவாகவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சிறப்பு அம்சமாக, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கீதா சிவராஜ்குமார் இணைந்து வெளியிட்டனர். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே கூடுதல் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெளியான போஸ்டரில் சிவராஜ்குமார் இதுவரை திரையில் காணப்படாத புதிய தோற்றத்தில், இளமையான ஸ்டைலிஷ் கெட்டப்பில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் கேமராவையும், மற்றொரு கையில் சிங்கக் குட்டியையும் ஏந்தியிருக்கும் அவரது தோற்றம் படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. இயற்கை, வனவிலங்குகள் மற்றும் சாகசம் கலந்த வித்தியாசமான அனுபவத்தை இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட முழுமையான விவரங்களும், படப்பிடிப்பு தொடக்க தேதி குறித்த அறிவிப்புகளும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவராஜ்குமார் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், ‘Welcome to Wildlife’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை முதல் கட்டத்திலேயே பல மடங்கு உயர்த்தியுள்ளது.

Surprise on ShivRajkumar Birthday… ‘Welcome to Wildlife’ First Look Wins Fans Over!

Chennai:

On the occasion of Kannada superstar Shivrajkumar’s birthday, the first-look poster of his upcoming pan-India film ‘Welcome to Wildlife’, in which he plays the lead role, has been officially released. Within minutes of its release, the poster has been widely shared on social media, drawing the attention of fans.

The film is being directed by Karthik Raju, a filmmaker who has carved a niche for himself by creating movies centered on unique storylines and engaging screenplays. He has previously gained attention through films such as ‘Thirudan Police’ in Tamil, ‘Ninu Veedani Needanu Nene’ in Telugu, and the recently released ‘Single’. He is now taking on a major pan-India project centered around Shivrajkumar.

The film is being produced on a grand scale by Gudipudi Vijay Kumar under the banner of KVK Productions. The team has stated that the movie will be made in multiple languages to appeal to audiences across India.

As a special highlight, actor Shivrajkumar and his wife Geetha Shivrajkumar jointly released the film’s first-look poster. The event received an enthusiastic response from fans.

In the released poster, Shivrajkumar appears in a fresh, youthful, and stylish look never seen before on screen. Seen holding a camera in one hand and a lion cub in the other, his appearance has further sparked curiosity about the film’s storyline. Expectations are also rising that the movie will offer audiences a unique experience blending nature, wildlife, and adventure.

The production house has said that complete details about the rest of the cast, technical crew, music composer, cinematographer, and the announcement of the shooting start date will be officially revealed soon.

Released as a birthday gift for Shivrajkumar’s fans, the first look has already raised expectations for ‘Welcome to Wildlife’ many times over at the very outset.