Tuesday, July 21
Shadow

“மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ட்ரெயின்’ புறப்படத் தயாராகிறது… சத்தியம் சினிமாஸில் உணர்வுகளால் நிரம்பிய இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா!”

“மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ட்ரெயின்’ புறப்படத் தயாராகிறது… சத்தியம் சினிமாஸில் உணர்வுகளால் நிரம்பிய இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா!”

சென்னை: வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ட்ரெயின்’ திரைப்படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னை சத்தியம் சினிமாஸில் கோலாகலமாக நடைபெற்றது. திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு, “மிஷ்கின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால்தான் இந்தப் படத்தின் கதையையே கேட்காமல் தயாரிக்க முடிவு செய்தேன். இப்படத்திற்காக பிரம்மாண்டமான ரயில் செட் அமைக்கப்பட்டது. விஜய் சேதுபதி அளவில்லா உழைப்புடன் நடித்துள்ளார். 63 கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் ரசிகர்களைச் சந்திக்கும்,” என்றார்.

இயக்குநர் மிஷ்கின், விஜய் சேதுபதியுடனான தனது நீண்டநாள் பயணத்தை நினைவுகூர்ந்தார். “இந்தக் கதையை எழுதும்போதே விஜய் சேதுபதியை மனதில் வைத்து உருவாக்கினேன். இந்தக் கதாபாத்திரத்தை அவரைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. ஒவ்வொரு காட்சியையும் ஒரே டேக்கில் உயிரோட்டமாக நடித்தார். படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்றால் என்னையே குறை சொல்லுங்கள்,” என்று தன்னம்பிக்கையுடன் பேசினார். தயாரிப்பாளர் தானுவின் ஆதரவையும் அவர் மனம் திறந்து பாராட்டினார்.

 

நடிகர் விஜய் சேதுபதி, “இன்று இவ்வளவு பேர் வந்திருப்பது எனக்காக அல்ல, மிஷ்கின் சாருக்கான அன்பு. அவருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. படப்பிடிப்பு தளம் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல வேலை செய்தவர்களை உடனுக்குடன் பாராட்டும் பழக்கம் அவரிடம் உள்ளது. ‘ட்ரெயின்’ ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவமாக இருக்கும்,” என்றார்.

நாயகி ஷ்ருதி ஹாசன், “மிஷ்கின் ஒரு அபூர்வமான படைப்பாளி. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இந்த வாய்ப்பு எனக்கு மறக்க முடியாத அனுபவம்,” என்று கூறினார்.

படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஐரா தயானந்த், “இது என்னுடைய முதல் படம். தமிழ் தெரியாத எனக்கு முழு படக்குழுவும் குடும்பம் போல துணையாக இருந்தது. விஜய் சேதுபதி, மிஷ்கின் இருவரிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டேன்,” என்றார்.

நடிகை ப்ரீதி கரண், இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்றும், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது என்றும் தெரிவித்தார். நடிகை மாளவிகா சுந்தர், பாட வாய்ப்பாக நினைத்து வந்த எனக்கு நடிப்பு வாய்ப்பு கிடைத்தது ஆச்சர்யமாக இருந்தது என்று கூறினார்.

மூத்த நடிகர் நாசர், “மிஷ்கின் குறித்து மணிக்கணக்கில் பேச முடியும். அவரது தொழில்முறை அணுகுமுறை, கதையின் மீது இருக்கும் அர்ப்பணிப்பு, கலைஞர்களை மதிக்கும் விதம் ஆகியவை தனித்துவமானவை. தமிழ் சினிமா இதுவரை பார்க்காத காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கும்,” என்று பாராட்டினார்.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கினுடன் பணியாற்றியது ஒரு புதிய அனுபவம் என்றும், அவர் உள்ளத்தில் குழந்தை மனம் கொண்டவர் என்றும் குறிப்பிட்டார்.

இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், ராம், பார்த்திபன், விக்னேஷ் சிவன், சசி, மடோன் அஷ்வின், அருண் மாதேஸ்வரன், பி.எஸ். வினோத் ராஜ், தமிழரசு பச்சமுத்து உள்ளிட்டோர், மிஷ்கினின் தனித்துவமான படைப்பாற்றல், விஜய் சேதுபதியின் மனிதநேயம் மற்றும் நடிப்பு திறனை மனமாரப் பாராட்டினர். ‘ட்ரெயின்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான திரில்லர் படமாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மிஷ்கினின் பணிமுறை, படப்பிடிப்பு தளத்தில் நிலவிய குடும்பச் சூழல், விஜய் சேதுபதியின் எளிமை மற்றும் தயாரிப்பாளர் தானுவின் உறுதியான ஆதரவு ஆகியவை அனைவரின் பேச்சிலும் பொதுவான அம்சங்களாக அமைந்தன.

இசை மற்றும் டீஸர் வெளியீட்டின் மூலம் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ட்ரெயின்’, ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியின் முதல் திரைப்படம் என்பதால், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Mysskin and Vijay Sethupathi’s ‘Train’ Sets the Stage with a Grand Audio & Teaser Launch

Chennai: The audio and teaser launch of ‘Train’, produced by Kalaipuli S. Thanu under the banner of V Creations and directed by Mysskin, was held in grand style at Sathyam Cinemas, Chennai. Starring Vijay Sethupathi, Shruti Haasan, Ira Dayanand, Preethi Karan, Malavika Sundar, Diya Sharma, Nassar, K.S. Ravikumar, Sampath Raj, Narain, Kalaiyarasan and many others, the event witnessed the presence of several leading filmmakers, actors and technicians from the Tamil film industry.

Producer Kalaipuli S. Thanu said that he had complete faith in Mysskin’s vision and chose to produce the film without even listening to the full script. He revealed that a massive eight-compartment train set was specially constructed for the film and praised Vijay Sethupathi for his tireless dedication. Thanu also confirmed that Train is slated for a theatrical release in August and appreciated the efforts of the film’s 63-member ensemble cast.

Director Mysskin shared his long-standing admiration for Vijay Sethupathi, revealing that he had written the script with the actor in mind. He stated that no one else could have portrayed the role the way Vijay Sethupathi has. Mysskin praised the actor’s ability to understand scenes instantly and deliver remarkable performances, often in a single take. He also expressed heartfelt gratitude to producer Kalaipuli S. Thanu for standing by the project throughout its journey.

Speaking at the event, Vijay Sethupathi thanked everyone who attended the launch and said the overwhelming support was a reflection of the respect and love people have for Mysskin. Recalling his association with the filmmaker, he described working on Train as a memorable experience and praised Mysskin’s unique way of motivating the cast and crew. Vijay Sethupathi added that audiences can expect an intense thriller, while the emotional bond between him and Mysskin made the filmmaking journey truly special.

Actress Shruti Haasan described Mysskin as one of the most creative minds she has worked with and said the film gave her an opportunity to learn and grow as an artist. She thanked the director for trusting her with the role.

Making her Tamil cinema debut, Ira Dayanand said Train would always remain special as her first film. She thanked Mysskin and the entire team for making her feel comfortable despite her unfamiliarity with the Tamil language and expressed her happiness about sharing screen space with Vijay Sethupathi.

Actress Preethi Karan expressed her excitement about being part of the film and thanked Mysskin for believing in her. She also said working alongside Vijay Sethupathi was a memorable experience. Actress Malavika Sundar shared that she initially thought she had been called to sing for the film but was pleasantly surprised to be offered an acting role instead.

Veteran actor Nassar described Mysskin as an extraordinary filmmaker with exceptional professionalism and said he had immense respect for the director’s creative process. He added that Train would feature visuals and storytelling unlike anything Tamil cinema has witnessed before.

Director-actor K.S. Ravikumar said working under Mysskin’s direction was a refreshing experience and praised the filmmaker’s childlike enthusiasm and generosity on the sets.

Several acclaimed filmmakers, including Vetrimaaran, Ameer, Ram, R. Parthiban, Vignesh Shivan, Sasikumar, Madonne Ashwin, Arun Matheswaran, P.S. Vinothraj and Tamilarasan Pachamuthu, lauded Mysskin’s unique filmmaking style and Vijay Sethupathi’s versatility, humility and dedication. They expressed confidence that Train would emerge as one of the most significant thrillers in recent Tamil cinema.

Members of the cast and technical crew also shared their experiences of working on the project, highlighting the warm atmosphere on the sets, Mysskin’s distinctive approach to filmmaking, Vijay Sethupathi’s simplicity and producer Kalaipuli S. Thanu’s unwavering support.

With the release of its audio and teaser, ‘Train’ has generated tremendous anticipation among cinema lovers. As the first collaboration between Mysskin and Vijay Sethupathi, the film is expected to be one of the most awaited Tamil releases of the year when it arrives in theatres this August.