
இந்திய திரையுலகில் நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகி என பன்முகம் கொண்டு விளங்குபவர் ஸ்ருதி ஹாசன். அதிலும் குறிப்பாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அவர் பிஸி நடிகையாக வலம்வருகிறார்.இவரை பற்றி எப்பவும் எதாவது கிசுகிசு வந்து கொண்டே தான் இருக்கும். இப்ப ஒரு புது கிசுகிசு இதுவும் காதல் வழிதான் யாரு என்று தானே யோசிகிரிங்க நம்ம ஊரு இல்லை கடல் தாண்டி காதல்
முன்னர் இவர் சித்தார்த், ரைனா ஆகியோரை காதலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இவர் லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேலை டேட் செய்து வருவதாக தகவல் வெளியானது. இதை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த அவர், ” நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே. இதுபோன்ற வதந்திகளை பரப்புவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?” என கோபமாக பேசியுள்ளார்.
