Wednesday, April 22
Shadow

சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஹிந்தி படம் மூலம் நடிக்கிறார் சுருதி ஹாசன்

சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘சிங்கம் 3’ படத்தை தொடர்ந்து இந்தியில் கவனம் செலுத்திவரும் ஸ்ருதிஹாசன், ‘பெஹென் ஹோஹி டெரி’ என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து, கமல் இயக்கி நடிக்கத் தொடங்கிய ‘சபாஷ் நாயுடு’ மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருந்த ‘சங்கமித்ரா’ படத்தில் ஒப்பந்தமானார்.

இந்த இரு படங்களின் வேலைகளும் தாமதமாகிவந்த வேளையில் ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது மகேஷ் மஞ்ச்ரேகர் இயக் கும் இந்தி படத்தில், வித்யுத் ஜம்வால் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி.

விஜய், காஜல் அகர் வால் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யுத்.

லிங்குசாமி இயக்கத் தில் சூர்யாவுடன் ‘அஞ் சான்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நஸ்ருதீன் ஷா, அமோல் பாலேகர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்