Tuesday, April 21
Shadow

மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டு இருக்கும் சுருதிஹாசன்

கடந்த சில காலமாக படங்களில் நடிக்காமல் தனது சொந்த வாழ்க்கை விஷ்யமாக இருந்த சுருதி மீண்டும் நடிக்க முடிவு எடுதுள்ளார்.

ஸ்ருதிஹாசன் கடைசியாக நடித்த தமிழ்ப் படம் கடந்த ஆண்டில் வெளிவந்த சி 3. தெலுங்குப் படம் கட்டமராயுடு. அப்பா கமல்ஹாசன் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வந்த சபாஷ் நாயுடு, கிடப்பில் உள்ளது.

கையில் படங்களே இல்லாமல் இருந்து வந்த ஸ்ருதிஹாசன், மீண்டும் பாலிவுட்டில் நடிக்கிறார். பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் படங்களில் நடித்த வித்யூத் ஜம்வால் ஜோடியாக ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி. இவர்களுடன் நஸ்ருதீன் ஷா, அமோல் பாலேகர் உள்ளிட்டவர்களுடன் நடிக்கிறார்கள்.

மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்குகிறார். கலானி என்டெர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதன் படப்பிடிப்பு நேற்று (ஏப்., 20) துவங்கியது.

காதல் உடன் கூடிய ஆக்சன் படமாக இந்தப்படம் உருவாகிறது.