Friday, April 12
Shadow

சூர்யா மீது கடும் கோவத்தில் சூர்யா ரசிகர்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சி3 படம் குடியரசு தினத்தில் வெளியாகும் என உறுதியாக கூறப்பட்டது. முதல் இரு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமிழக அரசின் கேளிக்கை வரிச்சலுகை கூட கிடைத்துவிட்டது.

ஆனால் தற்போது தமிழகத்தில் நிலைமை படு மோசமாக இருப்பதால் இப்படம் இரண்டு வாரங்கள் தள்ளி அதாவது பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரம் தள்ளிபோய் இருப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த தேதில் தான் ஜெயம் ரவி நடிக்கும் போகன் படமும் வெளியாகிறது சி 3 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் இது நான்காவது முறை ஒரு உச்ச நடிகரின் படம் அதுவும் சூர்யாவின் படம் இப்படி தள்ளி தள்ளி போவது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர்.

Leave a Reply