Tuesday, August 4
Shadow

செய்த சத்தியத்தை காப்பாற்றினார் சுஷாந்த் சிங் ராஜ்புத்!


பாலிவுட்டில் தன்னுடைய முதல் படமான கை போ சே- வில் உதவிய முகேஷ் சாப்ரவிற்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியுள்ளார் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

முகேஷ் சப்ரா மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் இருவருக்கும் தில் பேச்சரா வெறும் படம் மட்டுமல்ல,  அதையும் தாண்டி நட்பு மற்றும் விசுவாசத்திற்கான சான்று. முகேஷ் சப்ரா சுஷாந்த் சிங் உடைய ஒரு நல்ல நண்பரும் கூட,  இவர் முதன் முதலில் சுஷாந்த் சிங்கை கை போ சே என்ற படத்திற்காக தேர்வு செய்து அவருக்கு பாலிவுட்டில் முதல் படத்தை கொடுத்தார். அதில் முகேஷ் சப்ரா காஸ்டிங் டைரக்டராக இருந்தார். அதற்கு கைமாறாக சுஷாந்த் சிங், முகேஷ் சாப்ரா முதன்முதலில் இயக்குனராக அறிமுகமாகும் பாலிவுட் படமான தில் பேச்சராவில் நடித்துக் கொடுத்தார்.

இதைப் பற்றி இயக்குனர் முகேஷ் சாப்ரா கூறியுள்ளதாவது:

நான் ஒரு நாள் இயக்குனராகி என்னுடைய படத்தை இயக்கவேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்ததை சுஷாந்த் புரிந்துகொண்டார்,  மேலும் அவர் என்னுடைய முதல் படத்தில் நடித்துக் கொடுப்பதாக எனக்கு வாக்களித்திருந்தார்.

தற்போது தில் பேச்சராவின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது,  இந்த தருணத்தில் நான் சுஷாந்த் சிங்கை பற்றி சொல்லியே ஆகவேண்டும். இயக்குனர் ஆவது என்னுடைய கனவு, என்னுடைய முதல் படத்தில் ஒரு பெரிய நடிகரை வைத்து எடுக்காமல், என்னை புரிந்து கொண்ட ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன்.,  என்ன நடந்தாலும் இந்த நீண்ட பயணத்தில் அவர் என்னுடன் நிற்க வேண்டும், என்னை விட்டுக் கொடுக்கக்கூடாது என்று கருதினேன். அப்போது என் நினைவுக்கு வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தான்,  பல வருடங்களுக்கு முன் அவர் எனக்கு செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வந்தது. என்னுடைய உள்மனதில் இருந்த, இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தை புரிந்து கொண்டு,  நீ ஒரு நாள் நிச்சயம் ஒரு படத்தை இயக்குவாய் அதில் நான் உனக்காக நடிப்பேன் என்று கூறியிருந்தார். அதேபோல் தன்னுடைய சத்தியத்தை சுஷாந்த் சிங் நிறைவேற்றியுள்ளார். தில் பேச்சரா படத்திற்க்காக நான் அவரை அனுகியபோது,  அவர் கதையைக் கூட கேட்காமல் உடனடியாக சரி என்று சொல்லி விட்டார், இதில் எங்களுக்குள் இருந்த நட்பையும் தாண்டி ஒரு உணர்ச்சிகரமான இணைப்பு என்று கூட சொல்லலாம். அவ்வளவு நல்ல மனிதர் சுஷாந்த் சிங், என்று முகேஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு காட்சியிலும்,  அதை மேம்படுத்த அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார், அதேபோல் ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் அமர்ந்து அதைப் பற்றி பேசி….. அவ்வளவு நேர்த்தியாக எடுத்துள்ளோம். இதற்கு முழுக்க முழுக்க காரணம் சுஷாந்த் சிங் மட்டுமே.

சுஷன்ட் சிங் ராஜ்புத் மற்றும் சஞ்சனா சங்கி நடித்த தில் பேச்சரா படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.