
அடுத்த சாட்டை திரை விமர்சனம் (2.5/5)
சமுத்திரக்கனி நடிப்பில் 2012ல் வெளிவந்த படம் சாட்டை. பள்ளி ஆசிரியர் எப்படி ருக்கவேண்டும் என காட்டி நல்ல வரவேற்பையும் பெற்ற படம் அது. அதன் இரண்டாம் பாகம் 'அடுத்த சாட்டை' இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்
சாட்டை முழுவதும் பள்ளியை மையப்படுத்திய கதை என்றால், அடுத்த சாட்டை அப்படியே கல்லூரியில் நடப்பது போன்ற கதை. தயாளன் (சமுத்திரக்கனி) அப்பா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜில் தமிழ் ஆசிரியராக இருக்கிறார். மற்ற ஆசிரியர்கள் கடமைக்கு வேலை செய்துகொண்டு மாணவர்கள் மீது வெறுப்பை காட்டிக்கொண்டிருக்க, மாணவர்களுக்கு பிடித்தபடி நெருங்கி பழகி பாடம் நடத்தும் ஒரு சில ஆசிரியர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர்.
அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் தம்பி ராமையா. (அவர் தான் படத்தின் வில்லன்.) பல விஷயங்களில் அவருக்கும் சமுத்திரக்கனிக்கும் முட்டிக்கொள்கிறது.
தம்பி ராமையா மகன் பழனிமுத்த...