‘இமைக்கா நொடிகள்’ படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார்..
மிக பெரிய பட்ஜெட்.... தலை சிறந்த நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள்.... இந்த இரண்டு சிறப்பம்சங்களையும் வலுவாக உள்ளடக்கி உருவாகி வருகிறது கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி ஜெ ஜெயக்குமார் தயாரித்து, ஆர். அஜய் ஞானமுத்து இயக்க இருக்கும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படம்
"எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன் வலுவான முறையில் எழுப்பி கொண்டு வருகிறோம்....முக்கியமாக எங்கள் படத்தின் அஸ்திவாரமாக செயல்படுவது கதை களம் தான்.... அந்த கதை களத்தை தாங்கி நிற்கும் வலுவான தூண்களாக அதர்வா, இயக்குனர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா இருப்பது எங்கள் படத்திற்கு கூடுதல் பலம். சிறந்த நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் படத்தை மேலும் மெருகேற்ற...