
உலக ரசிகர்களை மீண்டும் மர்மத்தில் மூழ்கடிக்க வருகிறது ‘வதந்தி’ சீசன் 2… ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில்!
சென்னை, ஜூலை 27:
தமிழில் உருவாகி, முதல் சீசனிலேயே பரபரப்பான வரவேற்பைப் பெற்ற ‘வதந்தி’ வெப் சீரிஸ், தற்போது இன்னும் அதிக சஸ்பென்ஸ் மற்றும் மர்மங்களுடன் இரண்டாவது சீசனாக ரசிகர்களைச் சந்திக்க தயாராகியுள்ளது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த புதிய தொடர், வரும் ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
இந்த முறை, கதைக்களம் மதுரையின் மண்ணையும், அங்குள்ள பாரம்பரிய வாழ்க்கை முறையையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் பின்னணியையும் இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணை, அரசியல் பின்னணி, மனித உறவுகளின் சிக்கல்கள், வதந்திகள் உருவாக்கும் தாக்கம் மற்றும் உண்மைக்கான போராட்டம் ஆகியவை கதையின் மையமாக அமைகின்றன.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி இயக்கியுள்ள இந்த எட்டு எபிசோடுகள் கொண்ட தொடரை, புஷ்கர் – காயத்ரி, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக உருவாக்கியுள்ளனர்.
நடிகர் எம். சசிகுமார், நேர்மையான காவல் அதிகாரி எஸ்.ஐ. மூசா ரஸா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கதையின்படி, புதிய நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்கப் பணிகளின் போது எதிர்பாராத விதமாக மனித எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதனை விசாரிக்கும் மூசா ரஸா, பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மைகளையும், ‘மணி’ என்ற மர்ம நபரைச் சுற்றியுள்ள பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் எதிர்கொள்கிறார். விசாரணை முன்னேறும்போது அரசியல் தலையீடு, ஊடகங்களின் அழுத்தம், பொது மக்களின் வதந்திகள் என பல தடைகளை கடந்து உண்மையை வெளிக்கொணரும் அவரது பயணமே இந்த சீசனின் முக்கிய அம்சமாக இருக்கிறது.
முதல் சீசனில் வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான மெல்லிய கோட்டை விறுவிறுப்பாக சித்தரித்த படைப்பாளிகள், இந்த முறை அதைவிட ஆழமான மனித உணர்வுகள், சமூக பார்வைகள் மற்றும் மனநிலைகளை கதையுடன் இணைத்து புதிய அனுபவத்தை வழங்கியுள்ளனர்.
இந்த தொடர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. மேலும் ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
தென்னிந்திய கதைகளுக்கு உலகளவில் அதிகரித்து வரும் வரவேற்பை தொடர்ந்து, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் சஸ்பென்ஸ் திரில்லராக அமையும் என படக்குழுவும், பிரைம் வீடியோவும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Prime Video’s ‘Vadhandhi Season 2 – The Mystery of Mani’ Set for Worldwide Streaming from August 7
Chennai, July 27:
After winning widespread acclaim with its gripping first season, the acclaimed Tamil crime thriller series Vadhandhi is all set to return with an even more intense and suspenseful second chapter. Titled Vadhandhi Season 2 – The Mystery of Mani, the eight-episode series will premiere globally on Prime Video on August 7.
This season shifts its narrative to Madurai, seamlessly blending the region’s rich cultural heritage and the vibrant spirit of the world-famous Jallikattu festival into a compelling mystery. Packed with crime investigation, political intrigue, emotional conflicts, and the power of rumours, the series promises an edge-of-the-seat experience.
Created, written, and directed by Andrew Louis, the series is creatively produced by Pushkar and Gayathri under the banner of Wallwatcher Films.
M. Sasikumar headlines the series as the honest and determined police officer SI Moosa Raza, who is joined by Yashwant, Anagha Maruthora, Aparna Das, Vivek Prasanna, Revathi Sharma, and Arjun Nandakumar in pivotal roles.
The story begins when skeletal remains are unearthed during the inauguration of a new highway project. Assigned to investigate the mysterious discovery, SI Moosa Raza uncovers unexpected clues that lead him to a mysterious prisoner named Mani. As the investigation deepens, he finds himself navigating political pressure, media scrutiny, and deeply buried secrets in his relentless pursuit of the truth.
While the first season explored the thin line between rumours and reality, the new instalment expands the narrative with more layered characters, emotional depth, and complex human relationships, making the mystery even more compelling.
Vadhandhi Season 2 – The Mystery of Mani will stream in Tamil, with dubbed versions available in Telugu and Hindi, along with subtitles in 15 languages, reaching audiences across more than 240 countries and territories worldwide.
With South Indian stories continuing to resonate with global audiences, the makers are confident that Vadhandhi Season 2 – The Mystery of Mani will raise the bar for suspense thrillers and deliver another unforgettable viewing experience.
