“மணமகள் வீட்டில் குடியேறும் மணமகன்… மரபை மாற்றும் ‘பியார் பிரேமா கல்யாணம்’! புதிய புரமோவால் கவனம் ஈர்த்த நெட்ஃப்ளிக்ஸ்”
திருமணம் என்றாலே மணமகள் கணவர் வீட்டிற்கு செல்வது என்பது பல ஆண்டுகளாக சமூகத்தில் நிலவி வரும் வழக்கம். ஆனால், அந்த மரபையே தலைகீழாக மாற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் புதிய புரமோவை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. “ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா… இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” என்ற நகைச்சுவை கலந்த கேள்வியுடன் வெளியாகியுள்ள இந்த புரமோ, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சராக வரும் பவி என்ற இளம் பெண், திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல மறுக்கிறார். இதனால், கணவரே மனைவியின் வீட்டில் குடியேற வேண்டிய சூழல் உருவாகிறது. இந்த ஒரு மாற்றமே குடும்ப உறவுகள், பாரம்பரியம், கலாச்சார மோதல்கள் மற்றும் நவீன வாழ்க்கை முறைகள் குறித்து சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது.
காதல் மற்றும் குடும்ப உறவுகளை நகைச்சுவையுடன் இணைத்து சொல்லும் தனக்கே உரிய பாணியை, நடிகராகவும் இளன் இந்தப் படத்தில் தொடர்ந்துள்ளார். வழக்கத்திற்கு மாறான குடும்ப அமைப்பை மையமாகக் கொண்ட கதை என்பதால், இளம் தலைமுறையினருக்கும் குடும்ப ரசிகர்களுக்கும் படம் நெருக்கமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் இயல்பான நடிப்பு படத்தின் நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களுக்கு கூடுதல் வலுசேர்க்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தப் படம் குறித்து நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில், “விதிகளை பின்பற்றும் காதல் கதைகளை விட, அவற்றை மாற்றி எழுதும் கதைகள்தான் நீண்ட காலம் மனதில் நிற்கும். ‘பியார் பிரேமா கல்யாணம்’ அந்த வகையில், திருமண வாழ்க்கையை புதிய கோணத்தில் அணுகும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இயக்குநராகவும் நடிகராகவும் இளன் புதிய அனுபவத்தை வழங்கியிருக்கிறார்,” என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர், “தமிழ் மண்ணின் உணர்வுகளையும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான நவீன கதையையும் இணைக்கும் முயற்சிதான் இந்தப் படம். ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் நெட்ஃப்ளிக்ஸுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காதல், குடும்பம், தனித்துவம் ஆகிய உணர்வுகளை அவரது இசை மேலும் அழகாக வெளிப்படுத்தும் என படக்குழு நம்புகிறது.
மரபுகளை கேள்விக்குட்படுத்தும் ஒரு சுவாரஸ்யமான குடும்பக் கதையாக உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’, வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Netflix’s ‘Pyaar Prema Kalyanam’ Turns Tradition Upside Down; New Promo Sparks Curiosity Ahead of Release
27 July 2026: Challenging age-old marriage traditions with a refreshing and humorous premise, Netflix has unveiled a brand-new promo for its upcoming Tamil family entertainer Pyaar Prema Kalyanam. Built around the quirky question, “Should you run away to get married, or get married and then run away?”, the promo has already begun creating buzz among audiences for its unconventional take on married life.
Directed by Elan, who also makes his acting debut as the film’s lead, Pyaar Prema Kalyanam stars Saanvee Meghana as the female lead. The story revolves around Pavi, a popular social media influencer who refuses to leave her parents’ home after marriage. In an unexpected role reversal, it is her husband who moves into her home, leading to a series of hilarious family situations, cultural clashes, emotional moments and heartwarming discoveries.
Known for his signature style of blending humour with relatable family emotions, Elan brings the same storytelling approach to his debut as an actor. The film explores modern relationships through a fresh perspective while staying deeply rooted in Tamil family values, making it an entertaining watch for audiences of all ages.
The film boasts an impressive ensemble cast featuring Radhika Sarathkumar, Yogi Babu, M. S. Bhaskar, Geetha Kailasam, Elango Kumaravel, Senthil, Maran and Deepz Cyrus, whose performances are expected to add warmth, comedy and emotional depth to the narrative.
Speaking about the film, Monika Shergill, Vice President – Content, Netflix India, said that the most memorable love stories are those that dare to rewrite the rules. She described Pyaar Prema Kalyanam as a refreshing family entertainer that begins with a bold yet simple idea—what happens when the groom moves into the bride’s home after marriage? She also praised Elan’s fresh creative vision as both director and actor, while expressing excitement about continuing Netflix’s collaboration with producer Sreenidhi Sagar and Rise East Entertainment following the success of Made in Korea.
Producer Sreenidhi Sagar shared that after the overwhelming response to Made in Korea, the team wanted to back another authentic Tamil story with universal appeal. He believes Pyaar Prema Kalyanam successfully combines heartfelt emotions, humour and contemporary relationship dynamics while remaining firmly rooted in Tamil culture, making it a wholesome family entertainer for global audiences.
Adding to the film’s emotional appeal is music composed by Yuvan Shankar Raja, whose soundtrack beautifully complements the film’s themes of love, family, individuality and the pursuit of happiness on one’s own terms.
Blending romance, comedy, family emotions and a refreshing twist on conventional married life, Pyaar Prema Kalyanam is all set to premiere worldwide on Netflix on August 21, promising an entertaining experience for audiences across generations.
