Friday, February 7
Shadow

Tag: அந்தோணிதாசன்

இசைக் கலைஞன் அந்தோணிதாசன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அந்தோணிதாசன், தஞ்சை மாவட்டத்திலுள்ள ரெட்டிப்பாளையம் எனும் சிறு நகரில் பிறந்த ஒரு தமிழ் இசைக் கலைஞன் ஆவார்.[1] இவர் நாட்டுப்புற இசைப் பாடகர், தெருக்கூத்து இசைப் பாடகர், நாட்டுப்புறக் கலைஞரும் ஆவார். இவரது பெயரை "ஆண்டனி தாசன்", "ஆண்டனி தாஸ்" என்றும் உச்சரிப்பர். குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் பாடல்கள் இயற்றிப் பாடும் கலைஞராக உருவெடுத்துள்ளார். திரையிசையில் பெரும்பாலும் பின்னணிப் பாடகராக, சந்தோஷ் நாராயணன், ஷான் ரால்டன், விஷால் சந்திரசேகர் போன்ற புதுப்புது கலைஞர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். இது தவிர அவர் மேடையில் ஆடவும், நடிக்கவும் செய்வதோடு, சில இசைக் கருவிகளையும் வாசிக்கிறார். இசைப் பணி தவிர, சில தமிழ்த் திரைப்படங்களில், குறிப்பாகத் தான் பாடிய பாடல்களில் கௌரவத் தோற்றத்தில் தோன்றுவார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா எனும் திரைப்படத்தில் ஒரு கு...