எனக்கு அந்த நடிகையை பிடிக்கும்.. ஹரிஷ் கல்யாண்…
பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் தனக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மீதுதான் க்ரஷ் என தெரிவித்துள்ளார்.
பியார் பிரேமா காதால், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் தாராள பிரபு.
இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டது. இருப்பினும் படம் கொரோனா அசசுறுத்தல் முடிந்த பிறகு மீண்டும் ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நேற்று முன்தினம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் எந்த நடிகையின் மீது உங்களுக்கு பெரும் க்ரஷ் என்று கேட்டார். அதற்க...