
இயக்குனர் அ. வின்சென்ட் பிறந்த தின பதிவு
அலோய்சியசு வின்சென்ட் 1960ஆம் ஆண்டு முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியவர். கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் பிறந்த, இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சிறீதருடன் பல சிறப்பானப் படங்களில் பணி புரிந்துள்ளார். 1974ஆம் ஆண்டில் வெளியான பிரேம்நகர் என்ற தெலுங்கு படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவரது கடைசி மலையாளத் திரைப்படமாக 1985இல் வெளியான முப்பரிமாணத் திரைப்படமான பவுர்ணமி இராவில் அமைந்தது. 2003ஆம் ஆண்டில் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் (ISC) இவருக்கு கே. கே. மகசன், வி.கே.மூர்த்தியுடன் கௌரவ அங்கத்துவம் வழங்கியது.
உடல் நலக்குறைவால் 25 பிப்ரவரி 2015 அன்று தனது 86ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
இவர் ஒளிப்பதிவு செய்த சில திரைப்படங்கள்: அமரதீபம், உத்தம புத்திரன், எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், கல்யாணப் பரிசு, வ...