‘சென்னை 28 – II’ குழுவுடன் இணைந்து கிரிக்கெட், இசை மற்றும் இளமை பருவத்தை மலேசியாவில் கொண்டாடுங்கள்
வெங்கட் பிரபுவும், அவருடைய 'சென்னை 28' இரண்டாம் பாகத்தின் படக்குழுவினரும், தங்கள் படத்தின் இசை மற்றும் டிரைலரை வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நகரத்தில், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி இருக்கும் பிரம்மாண்ட அரங்கத்தில் மாலை 7 மணிக்கு வெளியிட இருக்கின்றனர்.
"வயதாகாமால் இருப்பதற்காக நாம் விளையாடுகிறோம்; விளையாடுவதை நிறுத்திவிட்டால் நமக்கு வயதாகிவிடும்...." என்பது ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் பிரபலமான வார்த்தைகள். அத்தகைய விளையாட்டுடன் இசையும் இணைந்தால், உற்சாகத்திற்கும், மகழ்ச்சிக்கும் அளவே இருக்காது. இன்னும் சொல்ல போனால், ஒரு மனிதனை இளமையாக வைத்திருக்க உதவும் முக்கியமான இரண்டு சிறப்பம்சங்கள் இசையும், விளையாட்டும் தான் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். அப்படி ஒரு உற்சாக உணர்வை நமக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கி இருக்கிறது, வெங்கட் பிரபு இய...