இன்று சீனாவில் வெளியாகிறது சூப்பர்ஸ்டாரின் 2.0
நடிகர் ரஜினியின் 2.0 திரைப்படம், சீனாவில் முதன் முறையாக, 48 ஆயிரம் ஸ்கீரின்களில் இன்று வெளியாகிறது.
திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், நடிகை எமிஜாக்சன் மற்றும் அக்சய் குமார் நடிப்பில் உருவான இந்த திரைப்படம், கடந்த நவம்பரில் வெளியாகி, 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. ரஜினிகாந்த் நடித்த படம் ஒன்று சீனாவில் பிரமாண்டமாக ரிலீசாவது இதுவே முதன்முறையாகும்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லைகா புரொடக்சன் தயாரிப்பிலான தர்பார் படம், 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 22000 காட்சிகள் வரை நாளை சீனாவ...