
முருகதாஸ் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா? ரசிகர்கள் பிரமிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
முதல் நாள் படப்பிடிப்பின் போது விஜய் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் தாடி, முடியில் வித்தியாசமாகவும், காதில் கடுக்கண் கணிந்தபடி இளமையாக இருந்தார். இந்நிலையில், இந்த படத்திற்காக விஜய் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில், அதாவது முதியவராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் ஊனமுற்றவராக நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி, படக்குழு அதனை மறுத்த நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷூம், முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.
ஏ.ஆ...