Saturday, February 15
Shadow

வலைதளத்தில் வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸான தோற்றம் புகை படம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62′ படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கி இருக்கிறது. படத்தின் பூஜையின் போது ஏ.ஆர்.முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.

இதில் கிளாப் அடித்து நடிகர் விஜய் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். அப்போது விஜய் முற்றிலும் மாறுபட்ட ஸ்டைலில் இருந்தார். அவரது தாடி வித்தியாசமாகவும், காதில் கடுக்கண் கணிந்தபடி இருக்கும் விஜய்யின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில், கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவில் படம் உருவாகிறது. துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைவது ரசிகர்ளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply