கேன்ஸ் பட விழா தனுஷ் பங்கேற்ற விழா ஆரம்பித்ததும் வெளிநடப்பு செய்த மக்கள்
கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் நடந்து கொண்டிருக்கிறது. பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், ஹூமா குரேஷி, மல்லிகா ஷெராவத், நடிகர் தனுஷ் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் லார்ஸ் வோன் ட்ரையர் இயக்கிய சீரியல் கில்லர் படமான தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட் திரையிடப்பட்டது.
திங்கட்கிழமை இரவு திரையிடப்பட்ட தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே 100 பிரபலங்கள் அரங்கில் இருந்து வெளியே சென்றுவிட்டனர்
தொடர் கொலை செய்யும் ஜாக் என்ற கதாபாத்திரத்தில் மேட் தில்லன் நடித்துள்ளார். அவர் 2 குழந்தைகளின் தலையில் சுட்டுக் கொன்ற காட்சியை பார்த்ததுமே 100 பிரபலங்கள் அரங்கில் இருந்து நடையை கட்டிவிட்டனர்.
சின்ன குழந்தைகள், பெண்களை ஈவு இரக்கமே இல்லாமல் கொன்று அவர்களின் உடல்களை சிதைப்பதை காட்டும் இது எல்லாம் ஒரு படமா...
