கோபத்தில் இருந்த நாயகி – மன்னிப்பு கேட்ட இயக்குநர்
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் வரவேற்பை பெற்று வரும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சினேகா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
அவருக்கு தரமற்ற உணவுப் பொருளால் குழந்தையை பறி கொடுத்து விட்டு, அது தரமற்ற உணவு என்பதை நிரூபிக்க தானே அதை உண்டு தன்னை வருத்திக் கொள்ளும் பாத்திரம், இதில் நடிக்க சினேகா 18 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். ஆனால் படத்தில் ஒரு சில காட்சிகள் தான் இடம் பெற்றன. இதனால் சினேகா வருத்தம் அடைந்தார். கஷ்டப்பட்டு நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக சமீபத்தில் புலம்பியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இது பற்றி கூறிய இயக்குனர் மோகன்ராஜா, “சினேகாவின் காட்சிகள் குறைக்கப்பட்ட வருத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. அவருடைய காட்சிகள் மட்டுமல்ல, வேறு சிலருடைய காட்சிகள் நீக்கப்பட்ட வருத்தமும் எனக்கு இருக்கிறது. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அப்படி செய்...

