
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்’.
மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், சார்லி என பலரும் நடித்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
எந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள் தான் ஜீவன் தரும். கதாபாத்திரங்களை உணர்வுப்பூரமாக அமைத்தால் அது மக்களிடையே நிச்சயம் போய் சேரும். இது போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிகர் சார்லி வேலைக்காரன் படத்தில் நடித்திருக்கிறார். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் சார்லி நடித்துள்ளார்.
” வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகி விடுவோம். அதுபோன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன். இப்படத்தில், திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது இந்த எளிமையும், எங்களது நட்பும் எங்கள் இந்த மகன் – தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாக்கியுள்ளது. இப்படத்தில் எங்களது கூட்டணி ஜனரஞ்சகமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கும்.
மகனின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதவளித்து துணை நிற்கும் ஒரு அருமையான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். இயக்குனர் மோகன் ராஜா சார், ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் சார் ஆகியோர் வெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் கிடையாது. அவர்களை மிகப்பெரிய தொழில் வித்தகர்கள்’ என்று தான் கூறவேண்டும் ” என்றார் நடிகர் சார்லி.