‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தால் அப்செட் ஆன திருநங்கைகள்
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், அஸ்வந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இதை பார்த்த திருநங்கைகள் அப்செட் ஆகியுள்ளனர். மேலும் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தங்களை தவறாக காட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து திருநங்கை பிரியா பாபு தன்னுடைய ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், உங்கள் ரசிகன் கைதட்ட வேண்டும், இதுவரை விஜய் சேதுபதி ஏற்றிராத கதாபாத்திரம் என அவருக்குத் திருநங்கை வேடம் அளித்தீர்கள். இதுதான் இந்தப் படத்தின் வியாபாரத்துக்கான படைப்பு. ஆனால், திருநங்கையர் குறித்த எந்தவிதமான புரிதலும் இன்றி அவர் ஆணாக (மாணிக்கம்) இருக்கும்போது திர...