
‘ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜா அடுத்ததாக இயக்கிய வரும் வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.
இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் முதல்முறையாக திருநங்கையாக நடிக்கிறார். பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில், இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். பி.எஸ்.வினோத் மற்றும் நிரவ்ஷா ஒளிப்பதிவு பண்களை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரத்திற்கான புகைப்படம் வெளியாகி மூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில், சமந்தா கதாபாத்திரம் குறித்து சிறிய டீசர் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெளியான டீசரில் கறிவெட்டும் கத்தியை கையில் வைத்திருக்கும் சமந்தா, தனது முன்னால் படுத்திருக்கும் ஒருவரின் கழுத்தை குறிபார்த்து வெட்டலாமா? வேண்டாமா? என்று பயத்துடன் யோசிப்பது போன்ற காட்சி வெளியாகி இருக்கிறது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.