Sunday, February 9
Shadow

Tag: #தமன்னா

தமன்னா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

Latest News, Top Highlights
நடிகர் தமன்னா அடுத்ததாக அதே கண்கள் புகழ் ரோகினி வெங்கடேசன் இயக்கத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் டைட்டில் 'பெட்டர்மாஸ்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லூக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தின் சூட்டிங் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், போஸ்ட் புரோடைக்சன் பணிகள் நடந்து வருகிறது. 'பெட்டர்மாஸ்' படம் தெலுங்கு படமான ஆனந்டோ பிரம்மா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் டாப்சி செய்த கேரக்டரை தமிழில் தமன்னா நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்....
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமன்னா

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமன்னா

Latest News, Top Highlights
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இது விபத்தா இல்லை யாருடைய சதியா என்று சந்தேகம் கிளம்பியுள்ளது. கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ஏதாவது கெட்டது நடந்துவிடுமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று காலை சென்றிருக்கிறார். பக்தர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். தமன்னாவை கோவிலில் பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த ஆண்டு தமன்னாவுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது....
நடிகை தமன்னாவை செருப்பால் அடித்த நபர் கைது!

நடிகை தமன்னாவை செருப்பால் அடித்த நபர் கைது!

Latest News, Top Highlights
நடிகை தமன்னா அவர்கள் ஹைதராபாத்தில் ஒரு புதிய நகைக்கடையை திறக்க சென்றிருந்தார். அப்போது அவரை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. காரில் இருந்து இறங்கிய தமன்னா தனது ரசிகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவர் மீது செருப்பை வீசியுள்ளார். அது தமன்னா மீது படாமல் அருகில் இருந்த ?பாதுகாவலர் மீது விழுந்தது. சுதாரித்து கொண்ட பாதுகாவலர்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தில் யார் செருப்பு இல்லாமல் உள்ளார் என பார்த்து செருப்பு எறிந்தவரை பிடித்துள்ளனர். விசாரித்ததில் அவர் முஷீராபாத்தை சேர்ந்த கரிமுல்லா என்றும், அவர் தமன்னாவின் தீவிர ரசிகர் என்பதும் தெரியவந்ததுள்ளது. சமீபகாலங்களில் தமன்னா நடித்த படங்கள் எதுவும் தெலுங்கில் வெற்றியடையவில்லை என்ற விரக்தியில் தான் இச்செயலினை தான் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்....
தமன்னா மீது செருப்பு வீசிய பொறியியல் பட்டதாரி

தமன்னா மீது செருப்பு வீசிய பொறியியல் பட்டதாரி

Latest News, Top Highlights
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பையா, அயன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்திலும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி என்று பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஹைத்ராபாத்தில் உள்ள ஹிமாயத்நகர் பகுதியில் புதிதாக தொடங்கப்படயிருந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு தமன்னா சென்றிருந்தார். அப்போது கூட்டத்திலிருந்த ரசிகர் ஒருவர் தமன்னாவை நோக்கி செருப்பை எறிந்துள்ளார். ஆனால் அது நகைக்கடை ஊழியர் மீது விழுந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, அவரது பெயர் கரிமுல்லா (31) என்றும் பொறியியல் பட்டதாரி என்றும் கூறியுள்ளனர். மேலும், தான் தமன்னாவின் தீவிர ரசிகர் என்றும் சமீபகாலமாக அவரது படங்கள் எதுவு...
நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!

நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!

Latest News, Top Highlights
சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி, கடைக்குட்டி சிங்கம் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமில்லாது, மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருபவர். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரின் அன்புக்கு சொந்தக்காரரான சௌந்ததராஜா இப்போது புதுமாப்பிள்ளை. “க்ர...
ஸ்கெட்ச் – விமர்சனம்

ஸ்கெட்ச் – விமர்சனம்

Review, Top Highlights
வட சென்னையில் வண்டிகளுக்கு பைனாஸ் செய்து வரும் சேட்டுவிடம் வேலை செய்து வருகிறார் விக்ரம். இவர் டியூ கட்டாத வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருகிறார். ஒரு நாள் நாயகி தமன்னாவின் தோழியின் வண்டியை தூக்குகிறார். அப்போது தமன்னாவை பார்க்கும் விக்ரம், அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல ரவுடியாக இருக்கும் பாபுராஜாவின் காரை நண்பர்களுடன் சேர்ந்து தூக்குகிறார். இதனால், கோபமடையும் பாபுராஜா, விக்ரமையும் நண்பர்களையும் பழிவாங்க நினைக்கிறார். சிறிது நாளில் விக்ரமின் நண்பர்களில் ஒவ்வொருத்தராக கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கு காரணம் யார்? விக்ரமை பாபு ராஜா கொலை செய்தாரா? தமன்னாவுடன் விக்ரம் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவது தனக்கே உ...
பிரபல இயக்குனர் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்

பிரபல இயக்குனர் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்

Latest News, Top Highlights
விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக `கதாநாயகன்' படம் வெளியானது. இவர் தற்போது `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சஸன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் கவுதம் மேனன் தயாரிப்பில் `பொன் ஒன்று கண்டேன்' படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தில் இருந்து விலகுவதாக விஷ்ணு விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தேதி பிரச்சனையால் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் விளக்கம் அளித்திருக்கிறார். செந்தில் வீராசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கவிருந்த அந்த படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற `பெல்லிசூப்புலு' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது....
பொங்கல் திருநாளில் ஸ்கெட்ச் போட வரும் விக்ரம்

பொங்கல் திருநாளில் ஸ்கெட்ச் போட வரும் விக்ரம்

Latest News, Top Highlights
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. இதில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் பின்னணி பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாராகி உள்ள ஸ்கெட்ச் படம் ஜனவரி மாதம் பொங்கல் திரு நாளன்று படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஸ்கெட்ச் படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. விக்ரம், தமன்னாவுடன் இப்படத்தில், ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள் தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்....
பொங்கல் ரேசில் இருந்து விலகிய விக்ரமின் ‘ஸ்கெட்ச்’

பொங்கல் ரேசில் இருந்து விலகிய விக்ரமின் ‘ஸ்கெட்ச்’

Latest News, Top Highlights
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘ஸ்கெட்ச்’ படம் பொங்கலுக்கு ரிலீசாகாது என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்க, மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’. விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். விக்ரம், தமன்னா அவர்களது காட்சிகளை நடித்து முடித்துவிட்ட நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே சமயத்தில் ‘டப்பிங்’ பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வடசெ...