விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘ஸ்கெட்ச்’ படம் பொங்கலுக்கு ரிலீசாகாது என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்க, மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’.
விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார்.
விக்ரம், தமன்னா அவர்களது காட்சிகளை நடித்து முடித்துவிட்ட நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே சமயத்தில் ‘டப்பிங்’ பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வடசென்னையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். விக்ரம் குரலில் ஏற்கனவே `கனவே கனவே’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து படம் ஜனவரியில் ரிலீசாக இருக்கிறது. முன்னதாக பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் ரேசில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விஷாலின் இரும்புத்திரை, பிரபுதேவாவின் குலேபகாவலி மற்றும் சண்முக பாண்டியன் நடிப்பில் மதுர வீரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.