Thursday, December 1
Shadow

Tag: ‘தமிழ் ஐகான்ஸ்’ கேட்லாக் வெளியீட்டுவிழா !

‘தமிழ் ஐகான்ஸ்’  கேட்லாக் வெளியீட்டுவிழா !

‘தமிழ் ஐகான்ஸ்’ கேட்லாக் வெளியீட்டுவிழா !

Latest News
மறைந்த இசைமேதை எம் எஸ் என்கிற எம் எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ஆர்ட் கேலரியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கண்ணப்பன் மற்றும் வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் சீனிவாசராவ். ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு 'கேட் லாக்' கை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் பேசும் போது, "நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இங்கே எம்.எஸ் அவர்கள் பற்றிய ஓவியக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. எம்.எஸ். அம்மா எனறாலே அவரது அழகிய தோற்றமும், மூக்கின் இரு பக்கமும் ஜொலிக்கும் வைரமுக்குத்தியும் ,காதுகளில் மின்னும் வைரத்தோடும் , நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டும் மனதில் வரும். அவரது் தோற்றமே இந்தியப் பெண்ணின் அடையாளமாக இருந்தது...