தயாரிப்பாளர் மா. ரா. மறைந்த தின பதிவு
மா. ரா. என பிரபலமாக அறியப்பட்ட மா. ராமச்சந்திரன் ஒரு எழுத்தாளரும், திரைப்பட கதை வசனகர்த்தாவும், இயக்குநரும், தயாரிப்பாளருமாவார்.
சாண்டோ சின்னப்பா தேவருக்குச் சொந்தமான தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கதை இலாகாவில் பணியாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். முன்னணி நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்றோர் நடித்த படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். இவற்றுள் என் அண்ணன், பலே பாண்டியா, ராமன் தேடிய சீதை என்பன குறிப்பிடத்தக்கவை.
கல்யாண மண்டபம் (1965) என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். அப்பா அம்மா (1974) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சென்னை இராயப்பேட்டையில் ஒரு பதிப்பகத்தை நடத்தி நூல்களை வெளியிட்டார்.
உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 81-ஆவது வயதில் சென்னை வேளச்சேரியில் 2014 ஆகஸ்ட் 26 செவ்வாய்க்கிழமை ...