
சக்ரா – திரை விமர்சனம் (அவசியம் பார்க்க வேண்டிய படம்) (Rank 4/5)
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் M.S.அமுதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சக்ரா. சைபர் கிரைம் மற்றும் இ-காமர்ஸ் மோசடிகளை மையமாக கொண்ட இந்த படத்தின் முக்கிய வேடத்தில் விஷாலுடன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
ஒரே நாளில் 50 கொள்ளைகளுடன் படம் துவங்குகிறது. அதுவும் ஆகஸ்ட் 15 அன்று இந்த கொள்ளை நடக்கிறது. இந்த கொள்ளைகளில் ஒன்று விஷாலின் வீட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஷால் (சந்திரு) ஒரு ராணுவ அதிகாரி. ஷ்ரத்தா ஸ்ரீநாத் (காயத்ரி) ஒரு போலீஸ் அதிகாரி இருவரும் இணைந்து ஒரு கொள்ளை வழக்கை விசாரிக்கத் தொடங்குகின்றனர்.கொள்ளையின்போது, தனது தந்தைக்கு வழங்கப்பட்ட அசோக சக்ரா பதக்கம் திருடப்பட்டிருப்பதை விஷால் கண்டுபிடிக்கிறார். படத்தின் முதல் பாதி நேரம் குறைவாக இருக்கிறது. இது ஹேக்கரை எவ்வாறு பிடிப்பது என்பது குறித்த ...