Friday, April 17
Shadow

Tag: ‘நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை மலேசிய உரிமையை வென்ற பிரபல நிறுவனம்

Latest News, Top Highlights
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் இப்படத்தை தமிழகத்தில் முன்னணி நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக கூறப்படுகின்றது. இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகின்றது. அப்படி ரிலிஸானால், கண்டிப்பாக இவை பெரும் சாதனை தான், அஜித் திரைப்பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என தெரிகின்றது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் மலேசிய வெளியிட்டு உரிமையை எம்எஸ்கே பிலிம்ஸ் பெற்றுள்ளது....

நேர்கொண்ட பார்வை தமிழ்நாட்டில் வெளியாவதில் சிக்கல்?

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழ்நாட்டு வெயிட்டு உரிமையை ஜெமினி பிலிம்ஸ் சர்க்கியூட் பெற்றுள்ளது. இந்த நிறுவனம், பொருளாதார பிரச்சினை காரணமாக, மணிரத்னம் இயக்கிய கடல் படத்திற்கு பின் வெயிட்டு உரிமை பெறுவதை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிறுவனம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்ட மத கஜா ராஜா படம் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக வெளியிடப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் நடிகர் அஜீத் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் தமிழ்நாட்டு வெயிட்டு உரிமையை பெற்றுள்ளது. இதனால் இந்த படம் வெளியாவதும் நிறுத்தி வைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன....
‘நேர்கொண்ட பார்வை படபிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடைக்சன்  பணிகள் தொடங்கியது

‘நேர்கொண்ட பார்வை படபிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடைக்சன் பணிகள் தொடங்கியது

Latest News, Top Highlights
நடிகர் அமிதாப் பச்சன் நடித்த பாலிவுட் திரைப்படம் ‘பிங்க்’, தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் அஜித் குமார் தமிழில் நடிக்கும் இந்தப் படத்தை, ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார். படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீஸ் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த...