பயத்தில் உறையவைக்கும் “சதுரஅடி 3500
பயத்தில் உறையவைக்கும் “சதுரஅடி 3500”
"RIGHTVIEW CINEMAS" நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகை இனியாவின் மிரட்டல் நடிப்பில், உருவாகி வரும் திகில் திரைப்படம் “சதுரஅடி 3500”.
இப்படத்தை இயக்கியுள்ள ஸ்டீபன், படம் குறித்த நம்மிடையே கூறியதாவது, “சென்னையில் உண்மையிலேயே நடைபெற்ற ஒரு திகில் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாகவும், படத்தின் கதையை கேட்ட உடனேயே நடிக்க சம்மதம் தெரிவித்த நடிகை இனியாவிற்கு இத்தருணத்தில் தான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மேலும், இப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்குமாறு நடிகர் ரகுமானை தான் அணுகியதாகவும், கதை கேட்ட நடிகர் ரகுமான், இதுவரை திரைக்கு வந்த பேய்த் திரைப்படங்களின் கதையமைப்பிலிருந்து இப்படம் மாறுபட்டு இருப்பதாக பாராட்டியதுடன், ரசிகர்களை பயத்தில் உறைய வைக்கும் இப்படத்தில் தான் கண்டிப்பாக நடிப்பேன் எனக்கூறி நடிக்க சம்மதம்...
