Thursday, February 12
Shadow

Tag: #பாலா

இயக்குனர் பாலா பிறந்த தின பதிவு

இயக்குனர் பாலா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பாலா ஒரு குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார். 'இருட்டிண்ட ஆத்மா’னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் 'சேது’. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் 'நந்தா’. ஜெயகாந்தனோட 'நந்தவனத்தில் ஒரு ஆண்டி’தான் 'பிதா மகன்’. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்’, ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து 'நான் கடவுள்’, ரெட் டீ’ நாவலைத்தான் 'பரதேசி' என்று ஒரு படத்துக்கான கதையை முடிவு செய்ததாக பாலா கூறுகிறார். இ...
வர்மா படக்குழுவுடன் சென்னை திரும்பிய விக்ரம் மகன்

வர்மா படக்குழுவுடன் சென்னை திரும்பிய விக்ரம் மகன்

Latest News, Top Highlights
தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி இன்னமும் தேர்வாகவில்லை. பாலா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நேபாளத்தில் துவங்கியது. மகனின் முதல் படப்பிடிப்பை காண்பதற்காக விக்ரமும் படக்குழுவினருடன் நேபாளம் சென்றார். அங்கு அவர் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டார். ‘வர்மா’ படப்பிடிப்பு நேபாள தலைநகர் காத்மண்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருந்த நிலையில், படக்குழு தற்போது சென்னை விரைந்துள்ளது. மீண்டும் சென்னை திரும்புவதாக படத்தின் நாயகன் துருவ் விக்ரம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதிலிருந்து நேபாளத்தில் நடத்தப்பட்டு வந்த முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில...
ஜோதிகாவுக்கு பதில் அனுஷ்காவா – ரசிகர்கள் குஷி

ஜோதிகாவுக்கு பதில் அனுஷ்காவா – ரசிகர்கள் குஷி

Latest News, Top Highlights
  பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில், இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், டப் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குநர் பாலா படத்தை ரீமேக் செய்யலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் ஜோதிகா கேரக்டருக்கு அனுஷ்கா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவரே கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தயாரிப்பு தரப்பு அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனுஷ்கா நடிக்க மறுத்தால் பொருத்தமான வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும், மிக விரைவில்...
பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் – முக்கிய தகவல்

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் – முக்கிய தகவல்

Latest News, Top Highlights
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். `வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் இன்று துவங்கி உள்ளது. துருவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட இருக்கிறது. நாயகி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பாலா இயக்கும் இந்த படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் எழுதியிருக்கிறார்.இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்....