
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். `வர்மா’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் இன்று துவங்கி உள்ளது.
துருவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட இருக்கிறது. நாயகி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பாலா இயக்கும் இந்த படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் எழுதியிருக்கிறார்.இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.