Friday, February 7
Shadow

Tag: பேச்சு:

விருது கிடைச்சதும் குதிச்சதும் கிடையாது. கிடைக்கலன்னு துடிச்சதும் கிடையாது: நடிகர் தனுஷ் பேச்சு

Latest News, Top Highlights
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசுகையில், "அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது . வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்கு...

கோமாளி அனைவரையும் கவரும்: ஜெயம் ரவி பேச்சு

Latest News, Top Highlights
நடிகர் ஜெயம்ரவி மற்றும் காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்த ஜெயம்ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, தயாரிப்பாளர் ஐசரி கே கணேசன், இயக்குனர் பிரதீப் ரன்குனாதன் மற்றும் பலர் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, இந்த விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கோமாளி படத்தின் மூலம் பல்வேறு படிப்பினை மற்றும் அனுபவத்தை பெற்றுள்ளோன். இந்த படத்தை தேர்வு செய்தது போன்றே, அடங்க மறு படத்தையும் தேர்வு செய்தேன். இந்த படத்தை நான் தேர்வு செய்ததற்கான காரணத்தை நீங்கள் படம் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள். இந்த படத்திற்காக டாக்டர் ஐசரி கே கணேஷன் சார்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர் எனது அப்பா போன்றவர்; குழந்தை மனசு கொண்ட அவர் கடுமையான் உழைப்பாளி. எனது கனவே வேல் பிலிம் எண்ட்டர்நேசன...

சர்ச்சை பேச்சு: ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை

Latest News, Top Highlights
நடிகர் ராதாரவியின் பேச்சை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சமீபத்தில் நடந்த கொலையுதிர் காலம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது. இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த மேடையில் மட்டுமல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும் திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி வருகிறது. இதுஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும் அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமான சூழ்நிலையையும், மன உளைச்சல...