Sunday, February 15
Shadow

Tag: #போலீஸ்

லீக் ஆனது ‘தர்பார்’ சூப்பர்ஸ்டாரின் போலீஸ் லுக்

Latest News, Top Highlights
தர்பார் ஷுட்டிங் படங்க்கள் மீண்டும் வெளியாகி உள்ளது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "பேட்ட' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் "தர்பார்" படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, தலீப் தஹில், ப்ரதீக் பாப்பர் என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ரஜினி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் கட்...
போலீசாக நடிக்கும் பிரபல ஹீரோவின் மகன்

போலீசாக நடிக்கும் பிரபல ஹீரோவின் மகன்

Latest News, Top Highlights
நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், சகாப்தம் படத்தில் அறிமுகமானார். பின்னர் மதுரைவீரன் படத்தில் நடித்தார். இந்நிலையில், சண்முக பாண்டியன் நடிக்கும் மூன்றாவது படமான தமிழன் என்று சொல் என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது. இதில் நடிகர் விஜயகாந்த் உடன் சண்முக பாண்டியன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அவரது உடல் நல குறைவு காரணமாக அவர் நடிக்கவில்லை. அண்மையில் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை காஞ்சிபுரத்தில் நடந்தது. இந்த படத்தை ஜி என்டர்டேய்ன்னர்ஸ் தயாரிக்கக் உள்ளனர். இந்த படத்தில் சண்முக பாண்டியன் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரோனிகா சிங் முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா-விடம் அசோசியேட் டைரக்டராக இருந்த பூபாலன் இயக்க உள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் வம்சி கிருஷ்ணா, அழகம்பெருமாள், அர்ச்சனா, முன்ஸ்காந்த் ஆகி...
காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

Latest News, Top Highlights
சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் காவல்துறையிடம் புகாரும் அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் R1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்தது. காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிவெளியில் சொல்ல பயந்தாலும் நடிகை அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது....
உதயநிதியின் அடுத்த அவதாரம்

உதயநிதியின் அடுத்த அவதாரம்

Latest News, Top Highlights
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள `நிமிர்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் `கண்ணே கலை மானே' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். விவசாயத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஜனவரி 19-ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தை முடித்த பிறகு, உதயநிதி அடுத்ததாக `இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் உதயநிதி ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது....