Friday, March 13
Shadow

போலீசாக நடிக்கும் பிரபல ஹீரோவின் மகன்

நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், சகாப்தம் படத்தில் அறிமுகமானார். பின்னர் மதுரைவீரன் படத்தில் நடித்தார்.

இந்நிலையில், சண்முக பாண்டியன் நடிக்கும் மூன்றாவது படமான தமிழன் என்று சொல் என்ற படத்தின் அறிவிப்பு வெளியானது. இதில் நடிகர் விஜயகாந்த் உடன் சண்முக பாண்டியன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அவரது உடல் நல குறைவு காரணமாக அவர் நடிக்கவில்லை.

அண்மையில் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை காஞ்சிபுரத்தில் நடந்தது. இந்த படத்தை ஜி என்டர்டேய்ன்னர்ஸ் தயாரிக்கக் உள்ளனர். இந்த படத்தில் சண்முக பாண்டியன் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரோனிகா சிங் முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா-விடம் அசோசியேட் டைரக்டராக இருந்த பூபாலன் இயக்க உள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் வம்சி கிருஷ்ணா, அழகம்பெருமாள், அர்ச்சனா, முன்ஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.