Friday, April 17
Shadow

Tag: ராம்

நடிகர் ராம் சரண் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராம் சரண் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இவர் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலம், சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை சிரஞ்சீவி மற்றும் தாய் சுரேகா சிரஞ்சீவி ஆவார். இவரின் குடும்பம் ஒரு திரைப்பட கலை குடும்பம் ஆகும். இவர் டிசம்பர் 1ம் திகதி 2011ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விர...
சவரக்கத்தி – திரைவிமர்சனம் (தங்க கத்தி…) Rank3.5/5

சவரக்கத்தி – திரைவிமர்சனம் (தங்க கத்தி…) Rank3.5/5

Latest News, Review, Top Highlights
இயக்குனர் மிஷ்கினின் சகோதரர் ஆதித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த ‘சவரக்கத்தி’. இப்படத்திற்கு கதை, வசனம், திரைக்கதை அமைத்திருக்கிறார் மிஷ்கின். மேலும், மிஷ்கின், ராம் மற்றும் பூர்ணா முன்னனி நடிகர்களாக நடித்திருக்கிறார்கள். ராம் ஒரு சாதாரண சவரக்கத்தி தீட்டி சவரம் செய்யும் ஒரு கூலித் தொழிலாளி. தன் தொழிலையும் தனது அன்பான காது கேளாத மனைவி பூர்ணா மற்றும் இரண்டு குழந்தைகளையும் அளவுக்கு அதிகமாக காதல் செய்யும் ஒரு மனிதன். நிறை மாத கர்ப்பிணியான பூர்ணாவின் உடன் பிறந்த சகோதரரின் திருமணத்திற்கு தனது மனைவி, குழந்தையோடு ராம் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மிஷ்கினின் கார் அவரை கீழே தள்ளி விட கோபத்தில் மிஷ்கினை அடித்து விடுகிறார் ராம். கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து சென்றுவிடுகிறார் ராம். மிகப்பெரிய ரெளடியான மிஷ்கின், தன்னை அடித்த ராமை கொலை செய்யாமல் விட மாட்டேன்...